Sunday, 1 April 2018

கங்கை குலத்தார் Kongu-mandala-sathagam 30


கொங்கு மண்டல சதகம் 30

கங்கை மாறுபட்டுக் கன்னிமை அழிந்தாள்.
காவிரி கரைகடந்து ஓடிக் கன்னிமை அழிந்தாள்.
என்றெல்லாம் உலகிலுள்ளவர்கள் பழிக்காமல் இருக்க, கம்பன் பாடலைக் கேட்டுக் காவிரி கரைக் கட்டுக்குள் நிற்க, கம்பனைப் பாடவைத்தவர் கங்கைக் குலத்தவர். இவர்கள் வாழ்வது கொங்குமண்டலம்.  

கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரை கடந்தாள் எனும் நிந்தை புவியிலுளோர்
பன்னி இகழாது அமர் எனக் கம்பர் ஓர் பாச் சொலச் செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ் கொங்கு மண்டலமே. 30

கம்பன் பாடிய பாடலைக் கேட்டுக் காவேறி வெள்ளம் கட்டுக்குள் நின்றது என்பதைச் சொல்லும் பாடல்கள்.

கன்னி அழிந்தாள் கங்கை திறம்பினாள்
பொன்னி கரையழிந்து போயினள் என்று – இன் நீர்
உரை கிடக்கலாமோ உலகுடைய தாயே
கரை கடக்கல் ஆகாது காண் – கம்பன் பாட்டு

கதுவி வரும்பொன்னி கரை கடவா வண்ணம்
பதும முகக் கம்பனவர் பாட – வதுவை வரி
மாடை அரைக்கழஞ்சு வண் கம்பர்க்கு ஈந்த பரிசு
ஏடர் குலோத்துங்கன் எழுந்து.   

காவிரி வெள்ளம் கட்டுக்குள் அடங்குமாறு பாடிய கம்பருக்கு (இரண்டாம்) குலோத்துங்கன் தனக்குத் “திருமண வரி”நாக வந்த அரைக் கழஞ்சு பொன் அனைத்தையும் கம்பருக்குப் பரிசாக வழங்கினான். கம்பர் அந்தப் பொன்னை, தன்னைப் பாடவைத்த கங்கை குலத்தவருக்கு வழங்கினார்.

கங்கை குலத்தவர்களின் முன்னோன் சங்ககாலக் கங்கன். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியனை, கூட்டாகச் சேர்ந்து எதிர்த்த  ஏழு பேர்களில் ஒருவன்.

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.