Sunday, 1 April 2018

கொல்லிப்பாவை Kongu-mandala-sathagam 25

வடிவமைக்கப்பட்ட கொல்லிப்பாவை ஓவியம்
இக்காலத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொல்லிப்பாவை  அம்மன்

கொங்கு மண்டல சதகம் 25

உலகின் தாளாக இருப்பது கடல்.
கடல் மன்மதனுக்கு முரசு.
மகளிர் முலைகள் அவனுக்குப் படைகள்.
இதனைக் கொண்டு உலக்கில் எவரானாலும் போரிட்டு வெல்பவன் மன்மதன்.
ஒட்டுமொத்த மகளிரின் உருவமெல்லாம் உருக்கொண்டது போல் விளங்குவது கொல்லிப்பாவை.
இந்தக் கொல்லிப்பாவை இருப்பது கொங்குமண்டலம்.

கொல்லிப்பாவை பற்றி ஒரு விளக்கம்

தாணு உலகில் கடல் முரசு ஆர்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலை மடவார் சேனை கொண்டு பொருது மலர்ப்
பாணன் முதல் எவரானாலும் கொல்லியம் பாவை முல்லை
வாள் நகையால் உள்ளுருக்குவதும் கொங்கு மண்டலமே. 25

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.