Friday, 13 April 2018

குற்றியலுகரம் – ஆய்வு comparison


உ குறையொலியாக (குற்றியலுகரத்தில்) ஒலிப்பதில் இரண்டு வகையான நிலைகள் காணப்படுகின்றன.  

தொல்காப்பியம்
பாகு நெடில் தொடர்

வரகு உயிர்த்தொடர்
ஆகிய இரண்டு வகையான குற்றியலுகரங்களை மட்டுமே காட்டுகிறது.

தொல்காப்பியம் கூறுவது

தனியொரு சொல்லாக ஒலிக்கும்போதும் இவற்றில் உ எழுத்து அரை மாத்திரையாக ஒலி குறைவதைக் காணலாம்.
இவற்றைத் தனிமொழிக் குற்றியலுகரம் எனலாம்.

நன்னூல் மேலும் நான்கு வகையான குற்றியலுகரங்களைக் காட்டுகிறது.

எஃகு ஆய்தத் தொடர்
வாத்து வன்தொடர்
பந்து மென்தொடர்

மார்பு இடைத்தொடர்

இவற்றைத் தனிச்சொல்லாக ஒல்லிக்கும்போது உ ஒலி குறைவதில்லை. உயிரெழுத்து வந்து புணரும்போது குற்றியலுகரமாக மாறுகிறது.
இவற்றைப் புணர்மொழிக் குற்றியலுகரம் எனலாம்.

நன்னூல் நூற்பா (குற்றியலுகரம்)

நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மை யூருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. (நூற்பா: 94)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.