Monday, 16 April 2018

வேற்றுமை Case in Tamil language



1
பொருள் செயல்படுவதைக் கூறுவது எழுவாய். இதனை முதல் வேற்றுமை என்கிறோம்.
உழவன்  வந்தான்

2
பொருளைச் செயற்படுபொருளாக மாற்றுவது 2 ஆம் வேற்றுமை.
உழவனை வாழ்த்து.

3
பொருளைச் செய்யும் கருவி ஆக்குவது 3 ஆம் வேற்றுமை.
உழவனால் உண்கிறோம்.
உழவனோடு உண்.

4
பொருளை அடையும் இடமாக்குவது 4 ஆம் வேற்றுமை.
உழவனுக்குக் கொடு.

5
பொருளை விட்டு விலகும் இடமாக்குவது 5 ஆம் வேற்றுமை.
உழவனிடமிருந்து வந்த நெல்.
உழவனின் மேலோன் யார். 

6
பொருளை உடைமை ஆக்குவது 6 ஆம் வேற்றுமை.
உழவனது கலப்பை. 

7
பொருளைப் பிறவற்றின் இருப்பிடம் ஆக்குவது 7 ஆம் வேற்றுமை.
உழவனிடம் உள்ளது.
உழவன்கண் உள்ளது.

பொருளை அழைப்பது 8 ஆம் வேற்றுமை.
உழவா வா


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.