Thursday, 12 April 2018

தொல்காப்பியம் குற்றியலிகரம் Tolkappiyam Tamil Linguistics 9


குற்றியலிகர ஒலி                         

கேண்மியா – மி குற்றியலிகரம். - 34
நாகு யாது = நாகியாது, என்பது என்பது போல் குற்றியலுகரம் யா முதலில் வரும் சொல்லோடு புணரும்போது குற்றியலிகரம் வரும். வரகியாது, தெள்கியாது (தெள்கு = நெல்லை அரித்துத் தின்னும் தெள்ளுப் பூச்சி), எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது - 35

நூற்பா மூலம்
         
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்-
`யா' என் சினைமிசை, உரையசைக் கிளவிக்கு,
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.     34.  
         
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே;
உணரக் கூறின், முன்னர்த் தோன்றும்.  35.  

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.