Tuesday, 10 April 2018

தொல்காப்பியம் - எழுதும் முறை Tolkappiyam Tamil Linguistics 4


எழுதும் முறை

மகரக் குறுக்கம் உள்ளே புள்ளி வைத்து எழுதப்படும்
மெய்யெழுத்து புள்ளி பெற்றிருக்க வேண்டும்.
எ ஒ எழுத்துக்களும் புள்ளி பெற்றிருத்தல் இயல்பு.
புள்ளி இல்லாத மெய்யெழுத்து அ ஒலி பெற்றிருக்கும்.
பிற உயிரொலி பெறும் மெய்யெழுத்து உருவு திரிந்து எழுதப்படும்.
இப்படிப் புள்ளியிட்டும், உருவு திரிந்தும் எழுத்துக்கள் எழுதப்படும்.
உயிர்மெய் எழுத்துக்கள் ஒலிக்கும்போது மெய்யொலியின் வழியே உயிரொலி ஒன்றும்.

நூற்பா
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16

புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.