Tuesday, 10 April 2018

தொல்காப்பியம் உயிர்பெய் Tolkappiyam Tamil Linguistics 3


உயிர் மெய் மாத்திரை

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ – 12 எழுத்துக்களை உயிரெழுத்து என்பர்.
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – 18 எழுத்துக்களை மெய்யெழுத்து என்பர்.
மெய்யோடு இணைந்து உயிர்மெய்யாக நின்றாலும் உயிரின் மாத்திரை அளபு மாறாது.
மெய்யெழுத்து அரை மாத்திரை கால அளவு ஒலிக்கும்.
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் எழுத்துகளும் அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
மகரக் குறுக்கம் அரை மாத்திரை அளவிலும் குறையும்.

நூற்பா
ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8

னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9

மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10

மெய்யின் அளபே அரை என மொழிப. 11

அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை. 13

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.