Tuesday, 10 April 2018

தொல்காப்பியம் மாத்திரை Tolkappiyam Tamil Linguistics 2


குறில் நெடில் மாத்திரை

அ இ உ எ ஒ – ஐந்தும் ஒரு மாத்திரை அளபு ஒலிப்பதால் (குறில்) குற்றெழுத்து.
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ – ஏழும் இரண்டு மாத்திரை அளபு ஒலிப்பதால் (நெடில்) நெட்டெழுத்து.
எழுதப்படும் எந்த எழுத்தும் மூன்று மாத்திரை நேரம் ஒலிக்காது.
நீட்டி ஒலிக்கப்பட வேண்டுமானால் ஒலிக்கவேண்டிய ஒலிக்குறிப்பு எழுத்தினைக் கூட்டி எழுதுதல் வேண்டும்.
நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மை அறியாமல் கண் நொடிக்கும் அளவுதான் மாத்திரை. (கை நொடி எழும் அளவு என்பதும் மற்றொரு கால அளவு எனக் காட்டுவது பொருத்தமாகத் தோன்றவில்லை)


நூற்பா

அவற்றுள்,
என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3

என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7     

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.