Thursday, 12 April 2018

தொல்காப்பியம் குற்றியலுகரம் Tolkappiyam Tamil Linguistics 10


குற்றியலுகரம்

நாகு – நெட்டெழுத்தின் மேல் குற்றியலுகம் வந்தது.
வரகு – தொடர்மொழியில் குற்றியலுகரம் வந்தது. (36)

காசு, முரசு
காடு, குறடு
காது, எருது
(பு – வந்தவழி காண்க)
சாறு, முயிறு 
இவை முறையே  நெடில்தொடர் உயிர்த்தொடர் குற்றியலுகரங்கள். 


செக்குக்கணை (செக்கு உலக்கை), சுக்குக்கோடு (சுக்கில் இருக்கும் கோது), உப்புப்புலம் (37)

நுந்தை - மொழிமுதல் குற்றியலுகரம் 


குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (67).   

தொல்காப்பியமும் நன்னூலும்

நூற்பா மூலம்
         
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 36.  
         
இடைப்படின், குறுகும் இடனுமார் உண்டே-
கடப்பாடு அறிந்த புணரியலான.   37.  

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.