Wednesday, 11 April 2018

தொல்காப்பியம் எழுத்தொலி மயக்கம் Tolkappiyam Tamil Linguistics 6


எழுத்தொலி மயங்கல் (இணைந்து ஒன்று சேர்தல்)

வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய இந்த மூன்று ஆறு இன-எழுத்துக்களும் தம் தம் இன எழுத்து மெய்களோடு உடன் இணைந்து நின்று மயங்கும். \ பக்கம், பங்கு, செய்யில், மெய்யில் என்பது போல் கூட்டி உடன்மயக்கம் கொள்க. (22)

ட் எழுத்து – வெட்கம், கட்சிறார் (கண்பார்வை கூர்மையுள்ள சிறுவர்கள்),ட்போர் (கண்ணால் செய்யும் போர்) என்று க ச ப எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும்.
ற் எழுத்து – கற்க, கற்சிறார் (மலை வாழ் சிறுவர்), கற்போர் என்று க ச ப எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும்.
ல் எழுத்து – செல்க, செல்சிறார் (செல்லும் சிறுவர்), செல்ப என்று க ச ப எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும்.
ள் எழுத்து – கொள்க, கொள்சிறார் (கொள்ளும் சிறுவர்), கொள்ப என்று க ச ப எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும். (23)             

ல் எழுத்து – கொல்யானை, கோல்வளை என்று ய வ எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும்.
ள் எழுத்து – வெள்யானை, வெள்வளை என்று ய வ எழுத்துக்களோடு சேர்ந்து மயங்கும். (24)

ங் க் – தெங்கு
ஞ் ச் – பஞ்சு
ண் ட் – வண்டு
ந் த் – பந்து
ம் ப் – கம்பு
ன் ற் – கன்று என்று ஒத்த எழுத்துக்களோடு பொருந்தி மயங்கும். (25)

ண் – வெண்கலம், வெண்சாந்து. வெண்ஞாண், நண்பன், விண்மீன், பெண்யானை, கண்வலி
ன் – புன்கண் (துன்பம்), புன்செய், பொன்ஞாண், என்ப, என்மனார், பொன்யானை, பொன்வடம்
என்றெல்லாம் வரும். (26)

உரிஞ்யாது (தோல் எது)
பொருந்யாது (போர் எது)
திரும்யாது (திருகாணி எது)
தெவ்யாது (பகை எது) – என நிற்கும். (27)

கலம்வடை (கலவடை) – என நிற்கும் (28)

வேய் – வேய்கடிது, வேய்சிறிது, வேய்தீது, வேய்பெரிது, வேய்ஞான்றது (தொங்கிற்று) வேய்நீண்டது, வேய்மாண்டது, வேய்யாது, வேய்வலிது
வேர் – வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்பெரிது, வேர்ஞான்றது, வேர்நீண்டது, வேர்மாண்டது, வேர்யாது, வேர்வலிது
வீழ் (விழுது) – வீழ்கடிது, வீழ்சிறிது, வீழ்தீது, வீழ்பெரிது, வீழ்ஞான்றது, வீழ்நீண்டது, வீழ்மாண்டது, வீழ்யாது, வீழ்வலிது – என்றல்லாம் சேர்ந்து வரும். (29)

காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டம், பண்ணை, அத்தி, வெந்நோய், அப்பா, அம்மா, அய்யர், ர் ர் சேராது, வெல்லம், தெவ்வர், ழ் ழ் சேராது,ள்ளம், முற்றம், தென்னை, ழ் ர் இணையா – இப்படி இணையும் (30)

நூற்பா

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22

என்னும் புள்ளி முன்னர்
என்னும் மூ எழுத்து உரிய. 23

அவற்றுள்,
ளஃகான் முன்னர் வவும் தோன்றும். 24

எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25

அவற்றுள்,
னஃகான் முன்னர்
ஏழும் உரிய. 26

என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27

மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28

என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29

மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் அலங்கடையே. 30

நூற்பா மூலம் 1 எழுத்ததிகாரம் 1 நூல்-மரபு (எழுத்து மரபு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.