Monday, 26 March 2018

தலையில் குட்டிக்கொள்ளுதல், வழிபாடு Kongu-mandala-sathagam 9


கொங்கு மண்டல சதகம் 9   

பிள்ளையாரைத் தொழுவோர் விரல் முட்டியால் தலையில் குட்டிக்கொள்ளும் முறைமை முதன்முதலில் கொங்குமண்டலத்தில்தான் தோன்றியது.
சூரபன்மனுக்கு அஞ்சி இந்திரன் சீர்காழியில் நந்தவனம் வைத்துச் சிவனை வழிபட்டுவந்தான். அந்த நந்தவனத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக அகத்தியர் கமண்டலத்தில் இருந்த காவிரிநீரை வெண்காக்கை உருவில் சென்ற பிள்ளையார் கவிழ்த்துவிட்டார். அகத்தியர் சாபத்துக்குப் பயந்து பிள்ளையார் தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அகத்தியரை வழிபட்டார். அதனைப் பின்பற்றிப் பிள்ளையாரை மற்றவர்கள் வழிபடலாயினர்.

ஐங்கைப் புத்தேளைத் தொழுகின்ற பேர்கள் அகங்கசிந்து
செங்கைத் துணை முட்டியாய்த் தலையில் குட்டிச் சீர்பெறுநல்
துங்கப் பணிவிடை முன்தோன்று தானம் சுரர் மகிழும்
அங்குல் பொழிதிகழ் காவேரி சேர் கொங்கு மண்டலமே.  9


கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி