Saturday, 24 March 2018

அவை அடக்கம் Kongu-mandala-sathagam 2x


அறியாச் சிறுவர் சுவரில் கீறி அதில் உலகிலுள்ள கண்டங்களை அடக்கிவிட்டதாக எண்ணி மகிழ்வர்.
கொங்கு நாட்டின் வளத்தையும் சிறப்பினையும் அறியாத நான் மற்றவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு சொல்கிறேன்.
கொங்கு மண்டலத்தின் அடைவாக, கதைகள் பொதிந்த சதகத்தில் சொல்லுகிறேன்.
சுவரில் கிறுக்கும் சிறுவனை இகழாதது போல, தெளிவுடையோர் இகழமாட்டார்கள்.

கடல் சூழ் புவியில் கண்டம் மற்றும் காணும் சுவரில் கீறி மகிழ்
மடமார் சிறுவர் போல் கொங்கு வளமும் சீரும் ஓராதேன்
திடமாய் வினவி நோக்கி இசை தெளிவோர்முன் இம்மண்டலத்தின்
அடைவாம் கதைகள் பொதி சதகம் ஆக்கில் அறிஞர் இகழாரே. \ அவையடக்கம் \ 2

கொங்கு மண்டல சதகம் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி