Tuesday, 27 March 2018

திருமுருகன் பூண்டி Kongu-mandala-sathagam 15

திருமுருகன் பூண்டி

கொங்கு மண்டல சதகம் 15

முருகாபுரி என்பது திருமுருகன்பூண்டி
இங்குள்ள சிவன் சுந்தரர் பாடலைக் கேட்க விரும்பி இங்குள்ள காட்டில் சுந்தரர் வரும்போது அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்றுவந்த செல்வங்களைச் கொள்ளையடிக்கச் செய்தார்.
சுந்தரர் சிவனைப் பாடிச் செல்வத்தைத் திரும்பப் பெற்றார்.
இந்த முருகாபுரி இருக்குமிடம் கொங்குமண்டலம் (ஆறை நாடு)

கனத்த முலை கொண்டவள் பரவையார். அவர்மீதுள்ள காதலால் சுந்தரர் சேரநாடு சென்று சேரமான் பெருமாள் நாயனாரிடம் செல்வம் பெற்றுவந்தார்.

அன்னம் போல் நடை கொண்டவள் உமை

கனத்த வடிக் கொண் முலையாள் பரவை தன் காதலினால்
சொனத்தில் அடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்றமிழ்க்கா
அனத்தி நடை உடையாள் பாகன் தென் முருகாபுரிசூழ்
வனத்தில் அடித்துப் பறித்ததுவும் கொங்கு மண்டலமே.  15

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி