Tuesday, 27 March 2018

வானி கூடல் திருநண்ணாவூர் Kongu-mandala-sathagam 14

திருநண்ணாவூர் கூடுதுறை

கொங்கு மண்டல சதகம் 14

கால் இல்லாதது பாம்பு
இங்கு இராகு கேது பாம்புகள்
ஞாயிறு, திங்கள் இவற்றைப் பாம்பு மறைக்கும் காலத்தில் (சூரிய கிரகணம், சந்திர கிரகணம் காலங்களில்) பவானி ஆறும் பொன்னி என்னும் காவிரி ஆறும் கூடுமிடத்தில் வேலுலகம் வேண்டும் மக்கள் நீராடுவர். இந்த இடம் நண்ணாவூர் என்றும், வாலிப-காசி என்றும் கூறப்படும் பவானி என்னும் ஊர்.
இந்த ஊர் இருப்பது கொங்குமண்டலம்.

காலில் அரவம் இரு சுடரைப் பற்றும் காலத்திலே
மேலுலகம் பெறுவோர் புனல் மூழ்க விரும்பதுவும்
கோலம் மிகுந்த பவானியும் பொன்னியும் கூடுதுறை
வாலிப காசி நண்ணாவூர் பயில் கொங்கு மண்டலமே.  14

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி