Tuesday, 27 March 2018

திருச்செங்கோடு அர்த்தநாரீச்சுரர் Kongu-mandala-sathagam 13

அர்த்தநாரி \ அம்மையப்பர்

கொங்கு மண்டல சதகம் 13

கடல்சூழ்ந்த உலகத்தில் உமையொடு சேர்ந்திருக்கும் அர்த்தநாரி மேனியைச் சிவன் பெற்றிருக்கும் கோலம் கொண்ட திருச்செங்கோடு இருக்குமிடம் கொங்குமண்டலம்.

பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கினார்
உமை சிவனைத் தழுவிக்கொண்டு இருந்தபோது வண்டு உருவம் கொண்டு கழுத்தின் வழியே நுழைந்து சிவன் தலையை மட்டும் சுற்றிச் சிவனை வழிபட்டார்.
சிவன் உமைக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்து அம்மையப்பர் (அர்த்தநாரி) ஆனபோது இருவரையும் சேர்ந்து சுற்றும் நிலை உண்டாயிற்று.

நெடு வாரிதி புடை சூழலகத்தின் மலி உமை
ஒடு வாகு பெற்ற திருமேனி காணும் உயிர்கட்கு எல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தான் அர்த்தநாரிச் சிவ
வடிவானதும் திருச்செங்கோடு சூழ் கொங்கு மண்டலமே.  13

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி