Monday, 26 March 2018

திருப்பாண்டிக் கொடுமுடி Kongu-mandala-sathagam 12

கொடுமுடிநாதர் கோயில் 

கொங்கு மண்டல சதகம் 12

காவிரியில் நீண்டு வளரும் படித்துறை கொண்டது கறையூர் என்னும் திருப்பாண்டிக் கொடுமுடி
அடியார் பூப் போட்டுப் பூசை செய்யமுடியாத அளவில் உயரந்த முடியினைக் கொண்டு சிவபெருமான் இங்கு விளங்கினார்.
அகத்தியர் கமண்டலத்திலிருந்த நீரைக் காக்கை உருவில் வந்த பிள்ளையார் கவிழ்த்துவிட்டார்.
பெருக்கெடுத்து ஓடிய காவிரிமீது அகத்தியர் சினம் கொண்டார்.
சிவன் ஆணைப்படி பிள்ளையார் கவிழ்த்துவிட்டது அறிந்தும் என்மீது சினம் கொள்ளலாமா என்று சொல்லிக் காவிரிப்பெண் அகத்தியரைத் தொழுதார்.
அகத்தியர் சிவனைத் தொழச் சென்றார்.
சிவன் மண்ணுக்குள் புதையலானார்
அகத்தியர் சிவன் தலையைப் பிடித்துக்கொண்டார்
சிவன் கையளவு இலிங்கம் ஆனார்   
இப்படிச் சிவன் கையளவு இலிங்கமாக இருக்கும் கறையூர் தளம் இருப்பது கொங்குமண்டலம் (அரையநாடு, ஈரோடு மாவட்டம்)

நந்து படித்துறை சூழ் கறையூர் தனில் நம்பரைப் பூத்
தந்து படித்து அருச்சிக்க ஒட்டாத் திருத்தார் முடியும்
முந்து படிக்குள் அடங்கக் குறுமுனி முன் கையினால்
வந்து பிடிக்குள் அடங்கியதும் கொங்கு மண்டலமே.  12

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி