Monday, 26 March 2018

ஆனிலையப்பர் Kongu-mandala-sathagam 11

ஆனிலையப்பர் கோயில்

கொங்கு மண்டல சதகம் 11

கருவூர் சிவன் பசுபதீசுவரர்.
காமதேனுப் பசு இவரை வழிபட்டது.
கருவூருக்கு வடக்கில் உள்ள வெண்ணெய்மலையில் மேய்ந்துகொண்டு வழிபட்டது.
சிவன் ஆனிலையப்பர் அப் பசுவுக்குப் பிரமனைப் போலப் படைக்கும் ஆற்றலை வழங்கினார்.
இந்த ஆனிலையப்பர் கோயில் இருப்பது கொங்குமண்டலம். (வெங்கால நாடு)

வீ ழுஞ்சடையார் பசுபதி ஈச்சுரர் வெண்ணெய்மலை
சூழும் புகழொடு தோற்றிய நாடு தொழுது அர்ச்சிக்க நீர்
ஆழும் கடல் புவி அண்டம் எலாமுற வண்டர் தொழ
வாழும் பசு உற்பவமானதும் கொங்கு மண்டலமே.  11

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி