Monday, 26 March 2018

வெஞ்சமாக்கூடல் Kongu-mandala-sathagam 10


கொங்கு மண்டல சதகம் 10

வெஞ்சமாக் கூடல் கோயிலில் உள்ள மழுவேந்திய சிவபெருமான் தன்மீது தமிழ் பாடும் சுந்தரர்க்குப் பொன் வழங்க விரும்பினார்.
அதற்காகப் பார்பனக் கிழவி வடிவில் தன் அழகிய பிள்ளைகளுடன் ஒரு கிழவியிடம் சென்று தன் குழந்தைகளை அடகாக வைத்துக்கொண்டு செல்வம் தரவேண்டும் என்று கேட்டார். கிழவி தந்த பணத்தை வெஞ்சமாக்கூடல் சிவன் விகிர்தேசுவரர் (நன்மை செய்பவர்) சுந்தர்க்கு வழங்கினார்.

சுந்தரர் பேரூர் பதிகம் பாடிய பின்னர் இது நிகழ்ந்தது.

கிழ வேதிய வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்
அழகாகு மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருடி என்றேல்
எழு காதலால் தமிழ் பாடிய சுந்தரற்கு ஈந்த ஒரு
மழு ஏந்திய விகிர்தேசுரன் வாழ் கொங்கு மண்டலமே. 10

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி