Saturday, 24 March 2018

காப்பு Kongu-mandala-sathagam 1x

பிள்ளையார்

பிள்ளையாரை வாழ்த்தி இந்த நூல் தொடங்குகிறது.
பிள்ளையார் கொம்பு ஒன்று ஏந்திய யானைத்தலை கொண்ட தேவர்
தெய்வம், மனிதன், விலங்கு என்னும் மூன்று உருவம் கொண்டவர்
உயர்திணை, அஃறிணை என்னும்படி விளங்குபவர்
செம்மையான மனம் படைத்தவர் செயல்பாடுகளுக்கு வரும் இடர்பாடுகளை நீக்குபவர்.
தீய மனத்தவர் செய்யும் திமிரான செயல்களுக்குத் தொல்லை தருபவர்.

பூமலி செம்மனத்தார் புரி வினைக்கு இடர் அகற்றி
நாமலி தீமனத்தார் தசை வினைக்கு இடர் இயற்றிக்
கோமலி உருவ மூன்று கூறு இருதிணை பொருந்தித்
தேமலி மருப்பு ஒன்று ஏந்து தேவனைப் பணிகுவேமால். \ காப்பு \ 1

கொங்குமண்டல சதகம் பாடல் 1


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி