Sunday, 25 March 2018

கொங்குமண்டலம் 24 நாடு Kongu-mandala-sathagam 3


கொங்குமண்டலம் 24 நாடுகளைக் கொண்டது
மற்றும் இணைந்திருக்கும் நாடுகள் சிலவற்றைக் கொண்டது
இங்கு வாழும் நாவலர்கள் நாலா வகையான கலைக் கடல்களையும் குடித்தவர்கள்
அறநெறியில் வாழ்பவர்கள்
ஒன்றுக்கு ஒன்று தோல்வி அடையாத மொழிகளைக் கற்றவர்கள்
முருகன், திருமால், சிவன் கோயில்கள் பல இந்த மண்டலத்தில் உள்ளன.

24 நாடுகள்
அண்ட நாடு
அரையன் நாடு
ஆறை நாடு
ஆனைமலை நாடு
இராசிபுர நாடு
ஒருவங்க நாடு
காங்கேய நாடு
காஞ்சிக்கோயில் நாடு
காவடிக்கன் நாடு
கிழங்கு நாடு
குறும்பு நாடு
தட்டையன் நாடு
தலையன் நாடு
திருவாவினன்குடி நாடு
தென்கரை நாடு
நல்லுருக்கன் நாடு
பூந்துறை நாடு
பூவாணிய நாடு
பொன்களூர் நாடு
மணல் நாடு
வடகரை நாடு
வாரக்கன் நாடு
வாழவந்தி நாடு
வெங்கால நாடு

இணைநாடுகள்
இடைப்பிச்சான் நாடு
ஏழூர் நாடு
சேல நாடு
தூசூர் நாடு
பருத்திப்பள்ளி நாடு
விமலை நாடு

நாலா கலை அலை வாரிதி மாந்தி ஞயம் பொருந்தத்
தோலா மொழிகள் திகழ் நாவலர்கள் சுகம் பொருந்த
நாலாறு நாடும் இணை நாட்டுங் குஞ்சரி நாதன் உடன்
மால் ஆலகண்டர் அமர் பதி சேர் கொங்கு மண்டலமே. - 3

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி