Tuesday, 1 August 2017

திணைமாலை 99 Tinaimalai 99

பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கிழாய் - என்வாள்போல்
வாளிழந்த கண்டோள் வனப்பிழந்த மெல்விரலும்
நாளிழந்த எண்மிக்கு நைந்து.

கார் பருவத்தைக் கார் பருவம் அன்று என்று சொல்லும் தோழிக்குத் தலைவி கூறுகிறாள். 

வானவில் தோன்றியுள்ளது. 
காடே இல்லை என்னும்படி கருமேகம் மலையையும் சேர்த்து மூடியிருக்கிறது. 
என்ன பயன்? 
சும்மா (வாளா) போர்த்தியிருக்கிறது என்கிறாய். 
மிளிரும் அணிகலன் பூண்டவளே!
என் மேனி ஒளி போல கண்ணும் ஒளி இழந்தன. 
தோள் வனப்பு இழந்தன. 
அவர் சென்ற நாளை எண்ணி எண்ணி எண்ணிக்கை மிகுவதால் என் மெல்லிய விரல்களும் நைந்துபோயின. 

பொன்வாள் = வானவில்

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி