Tuesday, 1 August 2017

திணைமாலை 97 Tinaimalai 97

பாழிபோல் மாயவன் பற்றார் களிற்றெறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழியோ
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து.

தலைவன் இல்லாதபோது மயங்கும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். 

குளத்து நீர் போன்ற நிறம் கொண்டவன் மாயவன். 
அவன் தன் பகைவரின் யானைமீது எறிந்த சக்கரம் போல இருளுக்குள் ஞாயிறு மறைகின்றது. 
தோழி!
மயக்கம் தரும் மாலைப் பொழுதில் மாயவன் அண்ணன் பலராமன் நிறம் போல மதியம் தோன்றுகிறது. 
நான் இந்த மாலைப் பொழுதில் அவரை நினைத்துக்கொண்டு துன்பத்தைப் பொறுக்க மாட்டாமல் வருந்திக்கொண்டிருக்கிறேன். 

மான்மாலை - மால் + மாலை 
பாழி = நீர் நிறைந்த பாறைக் குளம் 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி