Tuesday, 1 August 2017

திணைமாலை 96 Tinaimalai 96

இருள்பரந் தாழியான் தன்நிறம்போல் தம்முன்
அருள்பரந்த வாய்நிறம் போன்று - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர வல்குலாய்
வேல்போலும் வீழ்துணையி லார்க்கு.

தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். 

சக்கரப் படையை உடைய திருமாலின் நிறம் போல இருள் பரவிக்கொண்டிருக்கிறது. 
அவன் அண்ணன் பலராமன் நிறம் போல ஒளியைப் பரப்ப வெண்ணிலா வருகிறது. 
அந்த நிலவொளி மருள் என்னும் ஆடை படர்ந்த பால் போல உள்ளது. 
படமெடுக்கும் பாம்பு போன்ற அல்குலை உடையவளே 
விரும்பும் துணை இல்லாதவர்க்கு இந்த மாலைக்காலம் பாயும் வேல் போல் தோன்றுகிறது.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி