Tuesday, 1 August 2017

திணைமாலை 94 Tinaimalai 94

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உண்ணிலா தென்னாவி ஊர்ந்து.

பருவ வரவு கண்டு தோழி வருந்தித் தோழியிடம் கூறுகிறாள். 

தன்னுடைய பல கதிர்களால் பகலை வாரிப் பருகிய ஞாயிறு மலையில் மறைந்துவிட்டது. 
போட்டி போட்டுக்கொண்டு திங்கள் வெண்ணிலா ஒளியைப் பரப்பிக்கொண்டு வந்துள்ளது. 
இது எனக்கு மயக்கம் தரும் மாலைப் பொழுது. 
மூங்கில் போன்ற தோளை உடையவளே 
என் உயிர் எனக்குள்ளே நிற்காமல் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி