Tuesday, 1 August 2017

திணைமாலை 93 Tinaimalai 93

தளவம் பூ
கருங்கடல் மாந்திய வெண்டலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பொருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தணைய
என்கொல்யான் ஆற்றும் வகை?

கார்ப் பருவம் கண்டு தலைவன் வராமையால் மனம் வருந்தும் தலைவி தோழிக்குக் கூறியது. 

வெள்ளைத் தலை கொண்ட மேகம் கருநிறக் கடலில் நீரை அள்ளிக்கொண்டு 
இருண்ட கடலில் மாமரமாக நின்ற சூரபனமனைக் கொன்ற முருகனின் வேல் போல் மின்னி, 
தான் கொண்டுவந்த கடல் முழங்குவது போல் முழங்கி, 
தளவம் பூக்கள் அரும்புக் குருந்து விடுமாறு செய்கிறது. 
அவர் வரவில்லை. 
எதற்காக நான் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டும்? 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி