Tuesday, 1 August 2017

திணைமாலை 92 Tinaimalai 92

செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிஃடுவன்றிக்
பொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு.

காதலனுடன் ஓடிப்போக மறுக்கும் காதலி தன் தோழியிடம் கூறுகிறாள். 

தன்னைக் காதலித்துத் தஞ்சம் அடைந்தவர் சீரழியும்படி கொடுமையான காட்டில் கூட்டிச் செல்வாரும் உண்டா? 
சிள்வண்டு ஒலி எழுப்பி பொல்லாங்கு விளைவிப்பன போன்று கூப்பிடும். 
கொடுமையான கதிரவனின் வெயில் பெருக்கத்தால் மண் துகள் கொடியாகி வெந்து மேலே எழும்பி வானத்தையே சுடும். 
கீழால் காலடி வெந்து கண்ணும் சுடும். 
இப்படிப்பட்ட வழியில் கூட்டிச் செல்வார் உண்டா?

சிஃடுவன்றி = சிள் + துவன்றி

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி