Tuesday, 1 August 2017

திணைமாலை 91 Tinaimalai 91

கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நண்ணியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்கி வீயும் இடம்.

காதலனுடன் ஓடிப்போக விரும்பாத காதலி தன் தோழியிடம் சொல்கிறாள். 

கள்ளி, சார், கார், ஓமை, நார் இல்லாத மரத்தில் பூக்கும் முருங்கை, அண்டிய புதராக இருக்கும் மூங்கில் போன்ற மரங்களில் 
புள்ளிப் பருந்தும், கழுகும் 
வழியில் செல்பவர்களைக் கொத்தித் தின்ன இருந்து, உறங்கி, சாகும் காட்டு வழியில் செல்ல,
நன்கு வாழ்பவர் விரும்புவாரோ?


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி