Tuesday, 1 August 2017

திணைமாலை 90 Tinaimalai 90

குறி சொல்லும் பெண் 
வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தால்
கூறாயோ கூறும் குணத்தினனாய் - வேறாக
என்மனைக் கேறக் கொணருமோ எல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான்.

காதலனுடன் அவள் மகள் சென்றுவிட்டாள். 
குறி சொல்லும் பெண்ணிடம் தாய் வினவுகிறாள். 

தெய்வ அருளால் கூறும் குணமுடையவளே 
வெவ்வேறு நினைவோடு உன்னை வினவுகிறேன். 
தெய்வ வாக்கால் அறிந்து சொல்வாயாக.
ஒளிரும் வளையல் அணிந்த என்மகளை அவளது காதலன் என் மனைக்கே கொண்டுவந்து திருமணம் செய்து தரும்படி வேண்டுவானோ? 
அல்லது 
தன் மனைக்கே கூட்டிச் செஃல்வானோ? 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி