Tuesday, 1 August 2017

திணைமாலை 89 Tinaimalai 89

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னனாளைத் தான்.
வழிப்போக்கன் சொல்கிறான்
வழியில் சென்ற காதலர்களில்
அவனை அவன் பார்த்தானாம்
அவளை
அவன் மனைவி பார்த்தாளாம்
அவன் பார்க்கவில்லையாம்
இப்படி ஒரு
ஏற்றம் மிகுந்த பண்பாடு
 

மகளைத் தேடிக்கொண்டு காட்டு வழியில் வரும் செவிலியிடம் மகளைக் கண்டவர்கள் கூறுகின்றனர். 
ஆண்மகன் சொல்கிறான். 

வெம்மைச் சுடர் வீசும் கதிரவன் போன்றவனை நான் பார்த்தேன். 
அவனுடன் சென்ற தண்மைச் சுடர் வீசும் நிலா போன்றவளை என் மனைவி பார்த்தாளாம்.
அவளை நான் பார்க்கவில்லை. 
அவர்கள் இருவரும் நம்மவர்கள் ஆயினார் என்றால் 
அவர்களை விருப்பத்துடன் கொள்ள  நீ செல்க. 
நீ தேடிவந்த  எண்ணம் எளிதாக நிறைவேறும்.  


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி