Wednesday, 2 August 2017

திணைமாலை 103 Tinaimalai 103

ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமந்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே யன்றிப் பணைத்தோளாய் கண்ணீரால்
அட்டினேன் ஆவி இதற்கு.

"பருவம் அன்று" என்று கூறி ஏமாற்றும் தோழியிடம் தலைவி கூறுகிறாள். 

  • இது கார்ப்பருவம் என்பதில் உறுதி இல்லை. 
  • மழை தன் நீரை பருவம் முதிராத காலத்தில் ஏதோ கடமை என்று கொட்டுகிறது போலும். 
  • பருவம் தோன்றவில்லை. - என்றெல்லாம் கூறுகிறாய்.
  • மூங்கில் போன்ற தோளினை உடையவளே!
  • நீ சொல்பவை உண்மை அல்ல. 
  • இது கார் காலமே. 
  • இந்தக் கார் காலத்துக்குத்தான் நான் என் கண்ணீரை ஊற்றி என் உயிரைத் தாரை வார்த்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 

ஒருவந்தம் = உறுதி 
உறை = மழை 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி