Wednesday, 2 August 2017

திணைமாலை 102 Tinaimalai 102

மானெங்கும் தம்பிணையோ டாட மறியுகள
வானெங்கும் மாய்ந்து வளம்கொடுப்பக் - கானெங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா வெனத்தேரா(து)
யானிறுத்தேன் ஆவி இதற்கு.


  • ஆண்மான் பெண்மானோடு எங்கும் விளையாடுகிறது. 
  • மான் குட்டிகள் துள்ளி விளையாடுகின்றன. 
  • வானம் எங்கும் இருண்டு மழைவளம் கொடுக்கிறது. 
  • காட்டின் எல்லாப் பகுதிகளிலும் தேன் தன்னிடம் திறுத்தி வைத்திருக்கும் வண்டுகள் "தீ" "தா" என்று ஓசை ஒழுப்புகின்றன. 
  • இவற்றை எண்ணி இன்பம் காண முடியாமல் என்னிடமிருந்து சென்றுகொண்டிருக்கும் உயிரை நிறுத்தி வைத்துக்கொண்டிருக்கிறேன். 

தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி