Wednesday, 2 August 2017

திணைமாலை 101 Tinaimalai 101

வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும்.

தலைவி தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள். 

  • வண்டுகள் இனமாக வந்து தேனை வௌவி உண்பது ஆம்பல் மலர். வௌவாத ஆம்பல் ஆம்பல் என்னும் பெயர் கொண்ட குழல். இந்த ஆம்பல் குழலின் இசையோசை கேட்கிறது. 
  • அவன் பூ-இதழ்களை நீளமாகக் கட்டிய மாலை அணிந்திருப்பான். அது வண்டினம் வாய் வைத்து விழுந்து தேன் உண்ணும் மாலை. இப்படி வண்டினம் வாய் வைக்காத மாலை, மாலைப்பொழுது.  
  • மாலைப் பொழுதில் குழலோசை கேட்கிறது. 
  • வண்டினம் தேன் உண்ணாத பூ வேலைப்பாடுகள் கொண்ட அழகிய தேரில் அவர் என்னிடம் வராமல் பிரிந்திருக்கும் நாளில் மாலைக்காலமும் குழலோசையும் வருகின்றன. 

தோழி, என்ன செய்வேன். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி