Tuesday, 1 August 2017

திணைமாலை 100 Tinaimalai 100

பண்டிமையச் சொல்லிய சொல்பழுதால் மாக்கடல்
கண்டிமைய மாந்திக்கால் வீழ்த்திருண்(டு) - எண்டிசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண்.

பருவம் கண்டு மனமழியும் தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள். 

முன்பு இமயமலை போல் சொல்லிய சொல் பழுதாகிவிட்டது. 
சொன்னபடி அவர் வரவில்லை. 
கார் மேகம் பெரிய கடலைக் கண்டு அது இமைக்கும்படி அதன் நீரைப் பருகி, மழைக்கால் இறங்கி, எட்டுத் திசையும் இருண்டு, தோன்றுகிறது. 
ஆனால் சொன்னபடி, காதலர் தேர் தோன்றவில்லை. 
அதனால் என் மேனியில் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை தோன்றுகிறது. 
அத்துடன் கண்ணில் கண்ணீர் தோன்றுகிறது.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - முல்லை 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி