Tuesday, 18 July 2017

திணைமாலை 153 Tinaimalai 153

தலைவியும்
தோழியும்
பேசிக்கொள்கின்றனர்
துனிபுலவி யூடலி னோக்கென் றொடர்ந்த
கனிகலவி காதலினுங் காணேன் - முனிவகலி
னாணா நடுக்கு நளிவய லூரனைக்
காணாவெப் போதுமே கண். 

துனி என்பது காதலில் பெரும் பிணக்கு.
புலவி என்பது காதலில் சிறு பிணக்கு. 
ஊடல் என்பது பெண்ணிடம் தானே தோன்றி தானே மறையும் காதல் பிணக்கு. 

துனி, புலவி, ஊடல் ஆகிய மூன்றாலும் நோக்கித் தொடர்ந்ததனால் என் காதலால் கனிந்த இன்பமோ, கட்டி அணைக்கும் கலவியோ காண முடியவில்லை. என் பிணக்குச் சினத்தை நீக்கிவிட்டால் நாணம் என்னை வாட்டுகிறது. 
அவன் ஈரமான வயல்களை உடைய ஊரன். 
அவனை என் கண் என் துனி புலவி ஊடலிலோ, அணைப்பிலோ, நாணத்திலோ எதிலுமே காண முடியவில்லை. 

அவனை அவள் ஏர் எடுத்துப் பார்க்க முடியவில்லையாம் - தலைவி சொல்கிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி