Tuesday, 18 July 2017

திணைமாலை 152 Tinaimalai 152

அவள் முலையும்
முலைப் பூணும்
முலையாலும் பூணாலு முன்காட்டஞ் சேர்ந்த
விளையாலு மிட்ட குறியை - யுலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வ னிற்கு முனைமுலைப்பா
றார்சிதைக்கும் வேண்டா தழு.

முலையாலும், முலையில் அணிந்த பூணாலும் முன்பு காட்டத்துடன் நீ உன் பெணுகளுடன் விளையாடிய குறிகளை என் மகனின் வாயிலிருந்து வழியும் சலுவாய் அழிக்கிறது. அவன் பால் உண்ணும் என் முலையில் தொங்கும் என் மாலையும் அழிக்க வேண்டுமா? நீ என்னைத் தழுவ வேண்டாம். 

பரத்தையிடமிருந்து வந்த தலைவனைத் தழுவ மறுக்கும் தலைவி இவ்வாறு  கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி