Tuesday, 18 July 2017

திணைமாலை 151 Tinaimalai 151

கிண்கிணி
சேறாடுங் கிண்கிணிக்காற் செம்பொன்செய் பட்டத்து
நீறாடு மாயதிவ னின்முனா - வேறாய
மங்கையரி னாடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரி னாடலா மின்று.

சேற்றில் விளையாடும் கால்
கிண்கிணி அணிந்த கால் 
செம்பொன்னால் செய்யப்பட்ட பட்டம் சூடியிருக்கும் நெற்றி 
புழுதி படியுமாறு ஆயிற்று  இவன் இல்லம். 
என் நிலைமை இப்படி ஆயிற்று.
முன்பு வேறுபட்டிருந்த மங்கையரின் இல்லத்தை என் கணவன் நாடுவானா?
(நாடமாட்டான்)
பெரிய கோலினை வளைத்துச் செய்யப்பட்ட யாழினை உடைய பாண்மகனே!
நீ தூது சொல்ல என் தங்கையர் இல்லத்துக்குச் செல்லலாம். 

தன் கணவன் பரத்தையர் இல்லம் செல்லமாட்டான் என்னும் நம்பிக்கையில் தலைவி இவ்வாறு கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி