Monday, 17 July 2017

திணைமாலை 150 Tinaimalai 150

அண்மைய காலப்
பாணன்
கண்ணுங்கா லென்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கான் மற்றின் றிவளொடுநே - ரெண்ணிற்
கடல்வட்டத் தில்லையாற் கற்பெயர் சேரா
ளடல்வட்டத் தாருளரே லாம்.

நினைத்துப் பார்ப்பதால் என்ன பயன்?
கலவைப் பண் யாழில் பாடும் பாண்மகனே!
எண்ணிப்பார்க்கும்போது இவளுக்கு ஒப்பானவர் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் என் நினைவுக்கு வரவில்லை. 
என்னை அழித்தொழிக்கும் போராளி வட்டத்தில் கல்லில் பெயர்  எழுதப்படாதவளாக இவள் இருக்கிறாள். 

தலைவன் தலைவியின் சிறப்பினைத் தன் நண்பனிடம் இவ்வாறு கூறுகிறான். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி