Monday, 17 July 2017

திணைமாலை 149 Tinaimalai 149

அவள் நாணம்
புண்கிடந்த புண்மனுநின் னீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறிதரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயற்போற் கண்ணினா
ணையாது தானாணு மாறு.

விழுப்புண் கிடந்த நிமித்தப் புள் போன்ற மனு மன்னன் நீ. 
(பரத்தையின் பிரிந்து வாழும்) உன்னை நீத்து இவள்  வாழ்ந்தாலும் இவளது பெண்மைத் தன்மை பிறிதாக உள்ளது. 
பாணன் பண் பாடி உன்னைப் போற்றத் தொடங்கா முன்னரே
சிவந்த கயல்மீன் போன்ற கண்ணினை உடைய இவள்
மனம் நைந்து போகாமல் உன்னை நினைத்து நாணம் கொள்கிறாள். 

இது விந்தையிலும் விந்தை என்று சான்றோர்கள் தலைவனிடம் கூறுகின்றனர். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி