Monday, 17 July 2017

திணைமாலை 148 Tinaimalai 148

தன் கன்றை
நினைத்துக்கொண்டு
இல்லம் திரும்பும்
எருமை
இருணடந் தன்ன விருங்கோட் டெருமை
மருணடந்த மாப்பழன மாந்திப் - பொருணடந்த
கற்பேருங் கோட்டாற் கனைத்துத்தங் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும்.

இருட்டு நடந்து வருவது போன்ற  எருமை 
பெரிய கொம்புகளை உடைய எருமை 
மயக்கம் நடை பயிலும் பழன நீரில் உள்ளனவற்றை மேய்ந்துவிட்டு
பழனப் பொருள்கள் படிந்திருக்கும் கல் போன்ற கொம்புகளுடன் 
கனைக்கும் ஒலி எழுப்பிக்கொண்டு 
தன் கன்றுக் குட்டியை நினைத்துக்கொண்டு 
நெல்லம் போரிலுள்ள  வைக்கோலைச் சூடிக்கொண்டு வரும். 

பரத்தை இல்லத்திலிருந்து  தன்னை நாடி வரும் கணவனை உள்ளுறை உவமப் பொருள் தோன்றும் வகையில் மனைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி