Monday, 17 July 2017

திணைமாலை 147 Tinaimalai 147

குளத்தில் எருமை
செங்கட் கருங்கோட் டெருமை சிறுகனையா
லங்கட் கழனிப் பழனம்பாய்ந் - தங்கட்
குவளையம் பூவொடு செங்கயன்மீன் சூடித்
தவளையுமேற் கொண்டு வரும்.

சிவந்த கண்ணும் கருமையான கொம்பும் உடைய எருமை 
சிறிய கனையொலி எழுப்பிக்கொண்டு
அழகிய  கண்ணகன்ற கழனியோரப் பழமையான நீர்நிலையில் பாய்ந்து 
அழகிய கண் போன்ற குவளைப் பூவையும், 
செந்நிறக் கயல் மீனைச் சூடிக்கொண்டு
தவளை தன் உடம்பில் ஏறியிருக்கும்படி வெளியே வரும். 

தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டானைத் தலைவி தன்  தோழியிடம் கூறுகிறாள். 


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி