Monday, 17 July 2017

திணைமாலை 146 Tinaimalai 146

அவள் நினைவு
மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியரா
யெண்கிடந்த நாளா னிகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யொழியத் தரள முலையினாண்
மென்மைசெய் திட்டாண் மிக.

மண்ணாகக் கிடக்கும் வையகத்தில் 
மண்ணில்லாத வானுலகப் பெரியார் என்று எண்ணும்படி 
நல்ல நாள், பெரிய நாள் என்றெல்லாம் போற்றும் நாளை இகழ்ந்து வாழும்படி, 
அந்தப் பெண் கிடந்தாள். 
தான் என்னும் தன்மை உணர்வு அற்றுக் கிடந்தாள். (அவனையே நினைத்துக்கொண்டு கிடந்தாள்)
முத்துமாலை அணிந்த முலையினாள் 
மென்மையாகக் காணப்பட்டாள். 

பாங்கன் தலைவனிடம் தலைவியைப் பற்றிக் கூறுகிறான்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி