Monday, 17 July 2017

திணைமாலை 145 Tinaimalai 145

தந்தை மகனுடன்
பாட்ட ரவம்பண் ணரவம் பணியாத
கோட்டரவ மின்னிவை தாங்குழுமக் - கோட்டரவ
மத்திரங் கொண்டோங்க லென்ன மகச்சுமந்
திந்திரன்போல் வந்தா னிடத்து.

போற்றிப் பாடும் பாட்டின் ஆரவாரம், 
பண்ணிசை முழங்கும் ஆரவாரம், 
பணிவில்லா ஓசை எழுப்பும் சங்கொலி ஆரவாரதம், 
ஆகியவை எல்லாம் ஒன்று சேர்ந்து எழுப்பும் ஆரவாரத்துடன்
மலையில் கேட்கும் அரவம் போன்ற மந்திர முழக்கத்துடன்
தன் மகனைத் தூக்கிக்கொண்டு
மகனின் தந்தை
இந்திரன் போல வந்தான். 

மகன் பிறப்புக் கொண்டாட்டம். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி