Monday, 17 July 2017

திணைமாலை 144 Tinaimalai 144

தோழிக்குச் சிவந்த நிற ஆடை அணிவித்து ஆண்மகனுக்கு வலை விரிப்பது பரத்தையர் வழக்கம்
அரத்த முடிஇ யணிபழுப்பப் பூசிச்
சிரத்தையாற் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று
மனைநோக்கி மாண விடும்.

அரத்த (ரத்தம்) நிறமுள்ள சிவந்த ஆடை அணிவித்து 
சிவந்த நிறங்களைப் பூசி அழகுபடுத்தி 
அக்கறையுடன்
செங்கழுநீர்ப் பூக்களைச் சூட்டிவிட்டுப்
பரத்தை தன் தோழியை உன்னை நோக்கி அனுப்பி வைத்தாலும்
நீ அவர்களிடம் எதுவும் சொல்லாதே. 
உன் வீட்டை நோக்கி உன் மாட்சிமைக்காக வந்துவிடு. 

இவ்வாறு சொல்லித் தலைவனின் தோழன் (பாங்கன்) தலைவனைத் தலைவியிடம் அனுப்பிவைக்கிறான்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி