Monday, 17 July 2017

திணைமாலை 143 Tinaimalai 143

சேவல் கூவுதல்
நல்வய லூர னறுஞ்சாந் தணியகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கட் - புல்லியார்
கூட்டு முதலுறையுங் கோழி துயிலெடுப்பப்
பாட்டு முரலுமாம் பண்.

அவன் நல்ல வயல்களை உடைய ஊரின் தலைவன். 
சந்தனம் பூசியிருக்கும் அழகிய மார்பினை உடையவன். 
அவனை அணைத்துக்கொண்டு கிடந்தேன். 
புறண்டு படுப்பதற்கு முன்பதாகச் சேவல் தன் கூட்டில் இருந்துகொண்டே குரலை எழுப்பிப் பாட்டுப் பாடத் தொடங்கிவிட்டது. 
விடிந்துவிட்டது. 

தலைவி கூற்று. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி