Monday, 17 July 2017

திணைமாலை 142 Tinaimalai 142

கருவுற்றிருக்கும் தாய்மார் புளிப்புச் சுவையை விரும்புவர்
கரையும் மண்ணைத் தின்ன விரும்புவர்
இந்த நோயை "வயா" என்பர்
தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர! - வண்கயம்
போலுநின் மார்பு புளிவேட்கைத் தொன்றிவண்
மாலுமா றந்நோய் மருந்து.

குளிர்ந்த குளத்திலுள்ள தாமரை மேல் இருக்கும் சற்றே பெரிதான உருவம் கொண்ட ஆண் அன்னத்தை அதை விடச் சற்றே சிறிதான உருவம் கொண்ட பெண் அன்னம் புண்படும் குளத்துள் இருந்துகொண்டு நினைக்கும் வயல்களைக் கொண்ட ஊரனே! 
வளமை மிக்க குளம் போன்ற உன் மார்பினை புளிப்புச் சுவையை விரும்பித் தின்னுமாறு வயா நோய் கொண்டவளாய்க் கருவுற்றிருக்கும் என் தலைவி விரும்புகிறாள். 

தலைவனைத் தோழி புகழ்கிறாள்

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி