Sunday, 16 July 2017

திணைமாலை 141 Tinaimalai 141

மணிச்சிரல் \ மீன் கொத்தி
அணிக்குரன்மே னல்லாரோ டாடினென் என்ன
மணிக்குரன்மேன் மாதார ளூடி - மணிச்சிரல்
பாட்டை யிருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை யிருந்துறையு மூர்.

நல்லாரின் அழகிய கூந்தல் மேல் படுத்து ஆடினேன் என்று சொல்லி என் மனைவி ஊடினாள். 
என் மனைவி மணி போன்ற இருண்ட கூந்தலை உடையவள். 
மணிச்சிரல் என்னும் சிச்சிலிப் பறவை பாட்டைக் கேட்டுக்கொண்டு அவள் மயங்கும் வயல்களைக் கொண்டது அங்கு அவள் இருந்து வாழும் ஊர். 

பரத்தையிடம் இருக்கும்போது தலைவன் மன் மனைவியை நினைக்கிறான். 


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி