Sunday, 16 July 2017

திணைமாலை 140 Tinaimalai 140

மண்ணைத் தொடப்போகும் குலை வாழை
மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேனமதென்(று)
உண்ணாப்பூந் தாமரைப் பூவ்வுள்ளும் - கண்ணார்
வயலாரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயலூர் அரவர் மகள்.

மண்ணைத் தொடும்படி வாழை குலை தள்ளும். 
அதன் உள்ளே இருக்கும் தேனை நமது என்று என் மகள் எண்ணுகிறாள். 
உண்ணாப் பூ தாமரை. 
அந்தப் பூவை என் மகள் தொடுக்கின்றாள். 
வயலூரன் அவள் கணவன். 
கணவன் வண்ணம் அறிந்து நடந்துகொள்கிறாள். 
இவள் ஆசை கொள்ளும் அரவர் குடியில் பிறந்த மகள். 

உடன்போக்கு நிகழந்து திருமணம் ஆன பின்னர் தலைவியைக் கண்டுவந்த தோழி செவிலிக்கு இவ்வாறு தெரிவிக்கிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி