Sunday, 16 July 2017

திணைமாலை 139 Tinaimalai 139

மருத மரம் 
மருதொடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதாடு உழல்கின்றார் ஓதை - குருகொடு
தாராத்தொ றாய்ந்தெடுப்பும் தண்ணெங் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர்.

மருத மரமும், காஞ்சி மரமும் செழித்து வளர்ந்திருக்கும் நிழலில் உழவர் நெல்லைப் போரடிக்கும்போது எழுப்பும் ஓசையானது
குருகு, தாரா பறவைகளை எழுந்தோடச் செய்யும் குளுமையான வயல்களை உடையது
ஏறாமல் தேரை இழுத்துச் செல்லும் என் மகனின் தந்தை வாழும் ஊர். 

கணவன் அளி செய்த்தை மனைவி உள்ளுறை உவமையால் சொல்கிறாள். 
கணவன் போனபின் மகனை அணைத்துக்கொண்டு தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி