Sunday, 16 July 2017

திணைமாலை 138 Tinaimalai 138

தாமரைக் குளத்தில் அன்னம்
கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்தையா என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர் தகை.

கறவை இனம் தன் கன்றுகளை நினைத்துக்கொண்டு சொரிந்த பால் வாய்க்காலாக ஓடி
தாமரைப் பூவில் வெண்ணிறத்தில் வீற்றிருக்கும் அன்னப்பறவையைப் பசியாற வைக்கும் 
என் மகன் வந்து "ஐயா" என்னும் வகைமைப்பாடு கொண்டவன் அவன் (என் கணவன்)
என் மகனின் தந்தையாரின் ஊர் இப்படிப்பட்ட தகைமை கொண்டது. 

கணவன் போனபின் மகனை அணைத்துக்கொண்டு தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி