Sunday, 16 July 2017

திணைமாலை 137 Tinaimalai 137

எருமை அசை போடல்
கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்தழகாத்
தாம்பல் அசைபோடும் தாழ்ந்து.

தலைவி, தலைவனின் புறத்தொழுக்கத்தை, உள்ளுறை உவமமாகத் தன் தோழியிடம் கூறுகிறாள். 

வலிமையான கொம்புகளும் சிவந்த கண்களும் கொண்ட எருமை 
வயலில் வலிமையான கோலாக விளைந்திருக்கும் மென்மையான கரும்புகளை அழித்தொழித்துவிட்டு 
ஆம்பல் பூவை மிதித்துக்கொண்டு 
அழகிய குவளைப் பூக்களைத் தின்றுவிட்டு 
அழகாகத் தன் பல்லைக் காட்டி அமர்ந்துகொண்டு அசை போடுகிறது. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி